உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் - சீன வெளியுறவு அமைச்சகச் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு!
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து சீன அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குச் சீனா தனது இரங்கலைத் தெரிவிப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சகச் செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், இந்த நெரிசலில் சிக்கிக் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்டை நாடான இந்தியாவில் நடந்த இந்தத் துயர நிகழ்வுக்குச் சீனா உடனடியாக இரங்கல் தெரிவித்தது, சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.