சட்டமுறை எடையளவு சட்டம் 2009-இன் கீழ் நடவடிக்கை; ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முத்திரை பெற அறிவுறுத்தல்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் தரமான எடை கற்கள் மற்றும் தராசுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், உரிய காலத்தில் அவற்றை மறு முத்திரையிட வேண்டும் என்றும் தொழிலாளர் உதவியாளர் அமலாக்கத்துறை ஆனந்தன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவுரைகளைப் பின்பற்றத் தவறும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்டமுறை எடையளவு விதிகள் 2011 ஆகியவற்றின் கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிகர்கள் தங்கள் எடை அளவுகளுக்கான முத்திரைக் கட்டணத்தைத் தொழிலாளர் துறையின் இணையதளம் மூலம் ஆன்லைனில் செலுத்திய பின்னர், முகாம் அலுவலகத்தில் உள்ள முத்திரை ஆய்வாளரை அணுகி தங்கள் பயன்பாட்டில் உள்ள எடை அளவுகளைச் சரிபார்த்து முத்திரையிட வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
