சேலத்தில் 20 கிலோ கஞ்சாவுடன் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது! Drug Trafficking: 4 Arrested with 20 Kg Ganja in Salem

சேலத்தில் 20 கிலோ கஞ்சாவுடன்  2 பெண்கள் உள்பட 4 பேர் கைது! Drug Trafficking: 4 Arrested with 20 Kg Ganja in Salem

ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்த கும்பல்; வீராணம் போலீசாரின் அதிரடி!

சேலத்தில் 20 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை வீராணம் போலீசார் கைது 

செய்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வலசையூர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வீராணம் போலீசார் அப்பகுதியில் நடத்திய திடீர் சோதனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நான்கு பேரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ், பாலகண்ணன், வைஷ்ணவி, தனலட்சுமி என்பது தெரியவந்தது.

இந்த நான்கு பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து சேலம் பகுதியில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் அம்பலமானது. அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாயைப் பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks