யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு: முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி! Good News for Investors: UPI Limit Raised for Insurance, Stocks

யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு: முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி! Good News for Investors: UPI Limit Raised for Insurance, Stocks

செப்டம்பர் 15 முதல் அமல்; முதலீட்டாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி!

ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக்கிய யுபிஐ (UPI) சேவையில் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி, காப்பீடு மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளுக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ மூலம் தற்போது வரை ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே அனுப்ப முடியும். இது, அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் போதுமானதாக இருந்தாலும், அதிக தொகையுள்ள முதலீடுகள் மற்றும் காப்பீடு பிரீமியங்களைச் செலுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) யுபிஐ பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியுள்ளது. அதன்படி, இனி ஒரு தனிநபர் காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance) மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் (Stock Market Investments) தொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 லட்சம் வரை யுபிஐ மூலம் ஒரே நேரத்தில் அனுப்ப முடியும்.

இந்தப் புதியய நடைமுறை செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதோடு, முதலீட்டாளர்கள் மற்றும் காப்பீடு வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வகையான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடரும்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks