சிதம்பரம் கனகசபை தரிசனம்: யார் யாருக்கு அனுமதி? - மனு தாக்கல் செய்யத் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! Chidambaram Kanakasabhai Darshan: Court Orders Dikshitars to File Plea

 சிதம்பரம் கனகசபை தரிசனம்: யார் யாருக்கு அனுமதி? - மனு தாக்கல் செய்யத் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! Chidambaram Kanakasabhai Darshan: Court Orders Dikshitars to File Plea

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு; அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட விசாரணை!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி அளித்துத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துப் பொது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில், கனகசபை மீது ஏறித் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாகத் தாக்கல் செய்யும்படி தீட்சிதர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனகசபை மீதேறி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கித் தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு, ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும், கோவிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கூறி, பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தீட்சிதர்கள் தரப்பு வாதம்

விசாரணையின் போது, தீட்சிதர்கள் தரப்பில், கனகசபை மீது ஏறித் தரிசனம் செய்ய, தீட்சிதர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அறநிலையத்துறை எதிர்ப்பு

இதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கனகசபை மீது ஏறித் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி அளித்து ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட தீட்சிதர்கள் தரப்பு, இப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கனகசபை மீது ஏறித் தரிசனம் செய்ய யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து விரிவான மனுவாகத் தாக்கல் செய்யும்படி தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks