55 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது! Youth Arrested for Assaulting 55-Year-Old Woman

 55 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது! Youth Arrested for Assaulting 55-Year-Old Woman

திருப்பூர் வெள்ளகோவில் அருகே கொடூரம்; போலீசில் புகார் அளித்த பெண் மருத்துவமனையில் அனுமதி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 55 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளகோவில் கம்பிளியபட்டி காலனியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவர், நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 55 வயது பெண்ணை அத்துமீறித் தாக்கி, தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் அவரைத் தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் கார்த்திக்கைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அந்தப் பெண், சிகிச்சைக்காகக் காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks