டெல்லியில் பயங்கர சதி முறியடிப்பு: ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கைது! 5 Terrorists Arrested in Delhi, Major Plot Foiled ISIS Terrorists

டெல்லியில் பயங்கர சதி முறியடிப்பு: ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கைது! 5 Terrorists Arrested in Delhi, Major Plot Foiled ISIS Terrorists

நாடு முழுவதும் அதிரடிச் சோதனை; வகுப்புவாத வெறுப்பு பரப்பி இளைஞர்களை மூளைச் சலவை செய்த கும்பல்!

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதக் கும்பலின் சதித் திட்டத்தை மத்தியப் புலனாய்வுத் துறையும், டெல்லி போலீசாரும் முறியடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவல் மத்தியப் புலனாய்வுத் துறைக்குக் கிடைத்தது. இதையடுத்து, தெற்கு டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில், மும்பையில் இருந்து வந்த அபுபக்கர் மற்றும் அப்தாப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பதுங்கியிருந்த ஆசார் டேனிஷ் என்பவரை, உள்ளூர் போலீசாருடன் இணைந்து டெல்லி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தகவலின் அடிப்படையில், ஹைதராபாத், மும்பை, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட நகரங்களில் நடத்திய சோதனையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்பை பரப்பி நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்காக பல்வேறு இணையதளக் குழுக்களை நடத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து, இந்திய இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஆட்களைச் சேர்த்துள்ளனர். கைதான ஆசார் டேனிஷ், பயங்கரவாத இயக்கத்தில் சேரும் இளைஞர்களுக்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் தயாரிப்புப் பயிற்சிகளை அளித்து வந்துள்ளதும் தெரியவந்தது.

இந்தக் கும்பலுடன் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks