விடாமுயற்சிக்கு வயது தடையில்லை! - 77 வயது மூதாட்டி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை! 77-Year-Old Woman Passes Plus-2 Exam in Kerala

விடாமுயற்சிக்கு வயது தடையில்லை! - 77 வயது மூதாட்டி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை! 77-Year-Old Woman Passes Plus-2 Exam in Kerala

57 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படிப்பைத் தொடர்ந்த ஸ்ரீதேவி; 1200-க்கு 829 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!


விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் படித்து, 77 வயதில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று, பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பாலக்காடு மாவட்டம், அலனல்லூர் அருகே பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (77). இவர் கடந்த 1968-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், தனது 19-வது வயதில் திருமணம் ஆனதால் படிப்பைத் தொடர முடியவில்லை. 57 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் படிக்க வேண்டும் என்ற தனது ஆசையை அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் ஆசைக்கு அவரது மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரன்கள் என அனைவரும் முழு ஆதரவு அளித்துள்ளனர். அலனல்லூர் ஊராட்சி சாக் ஷரதா மிஷன் மூலம் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. தனித்தேர்வராகத் தேர்வு எழுதிய ஸ்ரீதேவிக்கு, வகுப்புகள் போக மீதமுள்ள நேரங்களில் அவரது மருமகள் மஞ்சிமா பாடம் சொல்லிக்கொடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளில், ஸ்ரீதேவி 1,200-க்கு 829 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த வெற்றி குறித்து அவர் கூறும்போது, மனம் இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம் என்ற தன்னம்பிக்கையே இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ளது. எனது குடும்பத்தினரும், ஆசிரியர்களும் தந்த ஊக்கமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks