அதிரடி நடவடிக்கை! - ராணிப்பேட்டையில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 5 Arrested Under Goondas Act in Ranipet

அதிரடி நடவடிக்கை! - ராணிப்பேட்டையில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 5 Arrested Under Goondas Act in Ranipet

கொலை குற்றங்களில் ஈடுபட்ட கும்பல்; எஸ்.பி. அய்மன் ஜமால் பரிந்துரையில் கைது!


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சுதாகர், ஆனந்த், வினித், பிரேம்குமார் மற்றும் ரிகன் சுரேஷ் ஆகிய ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் குற்றங்களை வெகுவாகக் குறைக்க முடியும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks