ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்.. அமலாக்கத்துறை அதிரடி! Retired Bank Employee's House Raided by ED over Loan Fraud

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்.. அமலாக்கத்துறை அதிரடி!  Retired Bank Employee's House Raided by ED over Loan Fraud

கோவையில் நடந்த கடன் மோசடி வழக்கு; திருநெல்வேலியில் காலை முதல் இரவு வரை தொடர்ந்த விசாரணை!

திருநெல்வேலி தியாகராஜ நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சிவசுப்பிரமணியன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவசுப்பிரமணியன் கோவையில் வங்கி அதிகாரியாகப் பணியாற்றியபோது, ஒருவர் போலி ஆவணங்களைக் கொடுத்துப் பெரிய தொகையைக் கடனாகப் பெற்றதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் வீட்டிற்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை 9 மணி முதல் இரவு வரை இந்தச் சோதனை நீடித்தது. அமலாக்கத்துறையினரின் தீவிர விசாரணையில், சிவசுப்பிரமணியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.50 லட்சம் ரொக்கமும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks