ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்து: திமுக பிரமுகர் தலை நசுங்கி உயிரிழப்பு! Container Lorry Hits, DMK Official Dies in Arcot Accident

ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்து: திமுக பிரமுகர் தலை நசுங்கி உயிரிழப்பு!  Container Lorry Hits, DMK Official Dies in Arcot Accident

தேங்காய் வியாபாரத்திற்காகச் சென்றபோது விபரீதம்; ஒரே மகனை இழந்து பெற்றோர் சோகம்!


வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், திமுக பிரமுகர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கே.வி.குப்பம் வட்டத்திற்குட்பட்ட மாளியப்பட்டு பகுதியைச் சேர்ந்த மணி - சீத்தாம்மாள் ஆகியோரின் ஒரே மகன் கோவிந்தராஜ் (எ) வேலு (32). இவர் திமுகவின் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவின் துணை அமைப்பாளராகப் பணியாற்றி வந்தார். தேங்காய் விற்பனை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பம்பை அடிக்கும் தொழிலையும் செய்து வந்த கோவிந்தராஜ், தேங்காய் வியாபாரத்திற்காக நேற்று தனது ஸ்கூட்டியில் ஆற்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

வேப்பூர் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென அவரது ஸ்கூட்டி மீது மோதியது. இந்த விபத்தில், தலை நசுங்கி கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த ஆற்காடு நகர போலீசார், உயிரிழந்த கோவிந்தராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks