போக்சோ வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவு: சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது! Man Absconding in POCSO Case Arrested After 2 Years

போக்சோ வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவு: சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது! Man Absconding in POCSO Case Arrested After 2 Years

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பதுங்கியிருந்த நபரை, காவி உடை அணிந்து போலீசார் மடக்கிப் பிடித்தனர்!

கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் காவி உடையில் தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளியை, வாலாஜாபேட்டை போலீசார் சமயோசிதமாக அதே காவி உடையணிந்து திருச்செந்தூரில் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபரேஷன், சினிமா பாணியில் அரங்கேறிய ஒரு த்ரில்லர் கதையைப் போல் போலீஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

வாலாஜாபேட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வேதியியல் பட்டதாரி செந்தில்நாதன் (44), தனது வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார். ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, தன்னிடம் டியூஷன் படித்த ஒரு பிளஸ் 1 மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், வாலாஜாபேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

போலீசுக்கு எந்தத் தடயமும் கிடைக்காத வகையில், குற்றவாளி செந்தில்நாதன் காசிக்குச் சென்று, அங்கு ஆறு மாதங்கள் தங்கி பல்வேறு சாதுக்களுடன் பழகியுள்ளார். அங்கு ஜோதிடம் கற்று, பல்வேறு கோவில் நகரங்களுக்குச் சென்று தன் அடையாளங்களை மறைத்துத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். போலீஸ் தேடுவதை உணர்ந்து, தொடர்ந்து ஜோதிடத்தைப் பயன்படுத்தி இடம் மாறிக்கொண்டே இருந்துள்ளார். பல நகரங்களில் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகள் கழித்து, செந்தில்நாதன் திருச்செந்தூர் கோவிலில் தங்கியிருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் தனிப்படை ஒன்று காவி உடையணிந்து திருச்செந்தூருக்கு விரைந்தது. அங்கு, அருகிலிருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்து 'அப்பா செந்தில் நாதா, உன் பெயரைச் சொல்லி எங்களுக்குத் தண்ணீர் காட்டும் போக்சோ குற்றவாளியைக் கைது செய்ய அருள் புரிய மாட்டாயா?' எனப் போலீசார் மனமுருக வேண்டினர். அவர்கள் வேண்டிய அடுத்த நொடியே, தலைமறைவாக இருந்த குற்றவாளி அவர்களின் கண்ணில் பட்டுள்ளார். உடனடியாகச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்த தனிப்படை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks