இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரானார் சி.பி.ஆர்: குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு! C.P. Radhakrishnan takes oath as India's Vice President

இந்தியாவின்  துணை குடியரசுத் தலைவரானார் சி.பி.ஆர்: குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு!  C.P. Radhakrishnan takes oath as India's Vice President

நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று காலை இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புதிய துணை ஜனாதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்தத் தேர்தல் களம் திறக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநராகப் பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து, இந்தியா கூட்டணியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். 767 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். இது இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மற்றும் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். பபதவியேற்ற பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு விசுவாசமாகச் செயல்படுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தமிழ் மண்ணிலிருந்து ஒருவர் இந்த உச்சபட்ச பதவியை அலங்கரிப்பது, தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks