ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்! 4.80 Lakh Candidates Apply for TET Exam

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்! 4.80 Lakh Candidates Apply for TET Exam

கடந்த ஆண்டுகளை விட விண்ணப்ப எண்ணிக்கை அதிகரிப்பு; நவம்பர் மாதம் தேர்வு!

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) எழுத, சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளுடன் ஒப்பிடும்போது அதிக விண்ணப்பப் பதிவாகும்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இதற்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், கடந்த 2014 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், மற்ற ஆண்டுகளில் விண்ணப்பப் பதிவு 4 லட்சத்தைத் தாண்டவில்லை. இந்த ஆண்டு, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களும் விண்ணப்பித்ததால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெட் தேர்வு, வரும் நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks