மூளை தின்னும் அமீபா காய்ச்சல்: கேரளாவில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! Brain-Eating Amoeba Death Toll Rises to 6 in Kerala

மூளை தின்னும் அமீபா காய்ச்சல்: கேரளாவில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! Brain-Eating Amoeba Death Toll Rises to 6 in Kerala

 நீரில் இருந்து பரவும் அரிய வகை நோய்; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

கேரள மாநிலத்தில் 'மூளை தின்னும் அமீபா' எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த ஜூலை மாதம் முதல் இந்த அரிய வகை தொற்று நோய் பரவி வருகிறது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கிணறுகள், குளங்கள் போன்ற மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா, குளிக்கும்போது அல்லது முகம் கழுவும்போது மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து, அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுவே உயிரிழப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான இந்த நோய் பரவி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks