ஆந்திராவிலிருந்து ஆட்டோவில் குட்கா கடத்தல்: 350 கிலோ பறிமுதல்!350 kg Gutkha Seized Smuggled from Andhra Pradesh in Auto

ஆந்திராவிலிருந்து ஆட்டோவில் குட்கா கடத்தல்: 350 கிலோ பறிமுதல்!350 kg Gutkha Seized Smuggled from Andhra Pradesh in Auto
ரகசியத் தகவலின் பேரில் அரும்பாக்கத்தில் சிக்கிய நபர்; அம்பத்தூர் குடோனில் 325 கிலோ பறிமுதல்!


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஆட்டோ மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 350 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.

குட்கா கடத்தல் குறித்த ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, அரும்பாக்கத்தில் போலீசார் வாகனத் தணிக்கை நடத்தினர். அப்போது, ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த ஆறுமுகம் என்பவரைக் கைது செய்தனர்.

ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில், அம்பத்தூரில் உள்ள ஒரு குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 325 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்ததோடு, அங்கிருந்த மேலும் மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்தக் கடத்தல் பின்னணியில் உள்ள கும்பல் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks