பொறுப்பு டிஜிபி நியமனம்.. பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி! Madras High Court Dismisses Plea Against Appointment of Acting DGP

பொறுப்பு டிஜிபி நியமனம்.. பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி! Madras High Court Dismisses Plea Against Appointment of Acting DGP

தமிழக பொறுப்பு டிஜிபியாக  வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. பொறுப்பு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லையென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வு பெற்றதை அடுத்து, நிர்வாகப் பிரிவு டிஜிபி-யாக இருந்த வெங்கட்ராமனைப் பொறுப்பு டிஜிபியாக நியமித்து உள்துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஆர்.வரதராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரின் வாதம்

மனுதாரரின் மனுவில், டிஜிபி பதவி காலியாகும் போது, மூன்று மாதங்களுக்கு முன்னரே தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) அனுப்ப வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் மூன்று அதிகாரிகளில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமிக்கலாம்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் வெங்கட்ராமனைப் பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளது. 2026-ல் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த நியமனம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், பொறுப்பு டிஜிபி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது போன்றற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைச் சமர்ப்பித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், டிஜிபி பதவி காலியாக இருந்ததால், இடைக்கால ஏற்பாடாக ஒரு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்துப் பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks