குளித்தலையில் சட்டவிரோத மணல் கடத்தல்; லாரி ஓட்டுநர் கைது! Illegal Sand Smuggling Busted in Kulithalai, Karur

குளித்தலையில் சட்டவிரோத மணல் கடத்தல்; லாரி ஓட்டுநர் கைது! Illegal Sand Smuggling Busted in Kulithalai, Karur

3 யூனிட் மணல் பறிமுதல்; உடந்தையாக இருந்த 3 பேர் மீது வழக்கு பதிவு!

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை போலீசார் சுங்ககேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த டிப்பர் லாரியைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது, அந்த லாரியில் சட்டவிரோதமாக 3 யூனிட் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரான 40 வயது பழனிச்சாமி என்பவரைக் கைது செய்தனர். மேலும், இந்த மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த லாரி உரிமையாளர் குமரேசன், தினேஷ், சக்திவேல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks