கழிவுநீர் அகற்றும் லாரியை சிறைபிடித்து பெண் கவுன்சிலர் போராட்டம்: விழுப்புரத்தில் பரபரப்பு! Female Councilor Protests by Seizing Sewage Lorry in Villupuram

கழிவுநீர் அகற்றும் லாரியை சிறைபிடித்து பெண் கவுன்சிலர் போராட்டம்: விழுப்புரத்தில் பரபரப்பு!  Female Councilor Protests by Seizing Sewage Lorry in Villupuram

அடிப்படை வசதிகள் இல்லாததால் கண்டனம்; போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை!


விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, பெண் கவுன்சிலர் ஒருவர் நகராட்சிக்குச் சொந்தமான கழிவுநீர் அகற்றும் லாரியைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8-வது வார்டு கவுன்சிலரான பத்மாவதி, தனது வார்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் தேங்குவதாகவும், சாலை வசதி முறையாக இல்லை எனவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்தச் சூழலில், வார்டில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி லாரியை வழிமறித்து பத்மாவதி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks