உயிரிழந்த உறவுக்கார பெண் எரியும் சிதையில் குதித்து இளைஞர் தற்கொலை..!

மத்தியபிரதேசம்:

உறவுக்கார பெண்ணின் எரியும் சிதையில் குதித்து இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி. இவருக்கு வயது 21. கடந்த வியாழக்கிழமை அன்று வயல்பகுதிக்கு சென்றபோது, வயல்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராமல் விழுந்து உயிரிழந்துள்ளார். அதன்பின், உடலை மீட்ட குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு செய்து கிராமத்தில் உள்ள இடுகாட்டிற்கு ஜோதியின் உடலை கொண்டு சென்றனர்.

ஜோதியின் மரணம் குறித்து தகவலறிந்த அவரின் உறவுக்கார இளைஞர் கரண் அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஜோதியின் கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் இடுகாட்டில் ஜோதியின் உடலுக்கு அவரின் தந்தை எரியூட்டினார். அப்போது, இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கரண் ஜோதியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தானும் அந்த எரியும் சிதையிலேயே குதித்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் சிதையில் குதித்த கரணை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டனர். எரியும் சிதையில் குதித்ததில் தீக்காயங்களுடன் படுகாயமடைந்த கரணை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் படுகாயமடைந்த கரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                                                                                                 -Prabhanjani Saravanan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?