+2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.! - கோயில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது..!!

காஞ்சிபுரம்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் பூசாரியான இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பிரசாத் (27). இவர் சிவன் கூடல் சாலை சந்திப்பில் உள்ள கோயிலில் பூசாரியாக உள்ளர்.

இந்நிலையில் இதேப்பகுதியில் வசித்து வரும் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமியை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறியதை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க அவரது தந்தை புகார் அளித்தார்.

அப்புகாரின்படி போலீசார் பிரசாத்தை கைது செய்து விசாரணை செய்ததில், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து பிரசாத் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் ஶ்ரீபெரும்புதூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

                                                                                                             – Geetha Sathya Narayanan

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!