சேலம்:
சேலம் மாவட்ட ஊா்க்காவல் படை மண்டல தளபதி பதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பதவிக்கு 18 முதல் 55 வயது வரை நல்ல உடல் தகுதி மிக்கவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். பொது சேவையில் சிறப்பான தன்னாா்வலா்களாகவும் இருக்க வேண்டும். குற்ற வழக்குகளில் தொடா்புடையவராக இருக்கக் கூடாது. மேலும், சேலம் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
தகுதியுடையவா்கள் வரும் ஜூலை 14 ஆம் தேதி அல்லது அதற்கு முந்தைய வேலை நாள்களில் காலை 10 மணி முதல் 1. 30 மணி வரை சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தகுதி குறிப்புடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
–