திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம் கட்டனூரை சேர்ந்த யுகனேஷ் (7) என்கிற சிறுவன் தனது குடும்பத்துடன் வாகனம் மூலம் சென்றுள்ளார். ஆறுமுகநேரி பகுதிக்கு முன்னர் உள்ள சீன தோப்பு பகுதியில், வாகனமானது நிறுத்தப்பட்டு குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சிறுவன் யுகனேஷ் சாலையை கடக்க முயன்றுள்ளான்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக, திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கரம் வாகனம் சிறுவன் யுவனேஷ் மீது மோதியதில், சிறுவன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவன் இசக்கி ராஜா(21) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்த கார்த்திக் என்பவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருக்கோயிலுக்கு வரும் போது சாலை விபத்தில் மோதி சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-Pradeep