கோவை:
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் மூலம் மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து, கோபாலபுரத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இது குறித்து அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியான கணக்கு துவங்கி பணமொசடியில் ஈடுபட்டு வருகின்றனர், எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வலியுறுத்தி உள்ளார், அதில், அமேசான் கிஃப்ட் பே, கூப்பன் மூலம் பணம் அனுப்ப தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், இதே போல திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் எண் மூலம் அரசு ஊழியர்களிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
–