சேலம்;
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் இல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது இந்த ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை நம்பி வீரகனூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏறி சுற்றி குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனைத்தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மீன்பிடித் திருவிழா நடைபெறாது எனவும் ஏரிப் பகுதியில் ஆழமாக உள்ளதாகவும் மேலும் முட்செடிகள் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் மீன் பிடிக்கக் கூடாது என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது இதனை மீறி ஏரியில் பிடித்துச் சென்ற அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து விரட்டி அடித்தனர் இதனால் மீன்பிடி திருவிழாவை நம்பி வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
-Nallathambi S