சென்னை:
கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்த ஒளிப்பதிவாளர், அவரை மது அருந்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் 22 வயதான இளம் பெண். இவர், சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்து வரும் அதே சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்த காசிநாதன். 43 வயதான இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிய பல்வேறு சீரியல்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், அதை காரணமாக வைத்துக்கொண்டு கொளத்தூரை சேர்ந்த அந்த பெண்ணுக்கு சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அது குறித்து பேச அவரை தனது வீட்டிற்கும் அழைத்துள்ளார். அதை நம்பி அங்கு வந்த அந்த பெண்ணுக்கு சாகிநாதன் மது வாங்கி கொடுத்து அவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காசிநாதன் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அந்த பெண் அதற்கு மருப்பு தெரிவிக்கவே அவர் வலுக்கட்டாயமாக பாலியல் துண்புரத்தல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
வீட்டை பூட்டி வைத்து காசிநாதன் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அந்த பெண் அதனை தொடர்ந்து தப்பிக்க வழி தெரியாமல் தனது நண்பருக்கு ஃபோன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அந்த பெண்ணின் நண்பர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டதுடன், போலீஸில் புகாரும் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் காசிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடிகையாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– Dayana Rosilin