கூட்ட நெரிசலால் விபரீதம்..! ஓடும் ரயிலில் மாணவர் பலி.!!

சென்னை:

சென்னை ஏழுகிணறு ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (20) ஆவடி அடுத்த இந்துக்கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்த நரேஷ் மதியம் 1.45 மணிக்கு கல்லூரி முடிவடைந்த பின்னர் சக நண்பர்களுடன் இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் மின்சார ரயிலில் ஏறி சென்னை நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரயில் படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்ற அவர், கூட்ட நெரிசலில் ஆவடிக்கும் அண்ணனூர் ரயில் நிலையத்துக்கும் இடையே தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

                                                                                                                     -Prabhanjani Saravanan

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!