திருவள்ளூர்:
செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் சொன்னதை கேட்டு மாணவியை அவரது தந்தை பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்துக்கு பரிகாரத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சாமியார் முனுசாமி மாணவியை இரவு முழுவதும் இங்கு தங்கி பூஜை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் நள்ளிரவு பூஜை முடிந்ததும் தனது வீட்டுக்கு வந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து சிபிசிஐடியினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளிவந்துள்ளது. நள்ளிரவு பூஜைக்காக ஆசிரமம் சென்ற மாணவியை சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தற்போது சாமியார் முனுசாமியை போலிஸார் கைது செய்தனர்.
– Pradeep