கோவை:
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட
16வது வார்டு, டிவிஎஸ் நகர், வெங்கடேஸ்வரா காலனி பகுதியில், குதிரை குட்டி ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது, இதனை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் கடித்து, துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி பொதுமக்கள் இன்று 16 வது வார்டு கவுன்சிலர், தமிழ் செல்வனிடம் இன்று அப்பகுதி மக்கள், தெரிவித்தனர், இதனை தொடர்ந்து, இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்த கவுன்சிலர், அந்த பகுதிக்கு துப்புரவு மேற்பார்வையாளர் நாகேந்திரன், சுப்பிரமணி, ஆகியோர் முன்னிலையில் துப்புரவு ஊழியர்கள் உதவியுடன் குதிரை குட்டியை அகற்றி, சுத்தம் செய்து அந்த பகுதியில் தொற்று ஏதேனும் பரவாமல் தடுக்க, மருந்துகளை தெளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-Mohammad bilal