சேலம்:
பாதுகாப்பாக அகற்றுவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும், தாரமங்கலம் ஏரிகளிலும், அருகாமையில் இருக்கும் கிணறுகளிலும் மருத்துவக் கழிவுகள் அடிக்கடி கொட்டப்படுவது தொடர்கிறது. ஏறக்குறைய ஆறு மாத காலமாக தாரமங்கலம் பவளத்தானூர் ஏரியின் அருகாமையில் உள்ள கிணற்றில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் கழிவு கீழே பாசியுடனும் மேலே இருக்கும் கழிவுகள் புதுமையாகவும் காணப்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், மருத்துவக் கழிவுகளை வீசி செல்வார்கள் மாறும் இரண்டு மூன்று முறை வருவார்களாம், இரவு நேரங்களில் மட்டுமே அவர்களின் இருட்டு சேவை நடக்குமாம் எனவும் கூறுகின்றனர்.
இதில் என்ன வேடிக்கை என்றால் கழிவுகளை வீச்சு செல்வார்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே நேரத்தில் வீசுவது இல்லை என்றும் கூறுகின்றன. இதற்கு உடனடியாக காவல் துறை மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக தீர்வு காணவேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக இருக்கிறது.
எல்லா உயிர்களையும் காக்கும் மருத்துவத்துறையிலேயே இப்படி சட்டவிரோத செயல்கள் நடந்தால் என்னவாகும் நம் சமூகம்.
ஒன்றிணைவோம், நாட்டை பாதுகாப்போம்.! நம் “நாடு” நம்ம “ஊர்” ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் வாருங்கள்..!
-திருமூர்த்தி