"தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்" - அலர்ட்..!

தாம்பரம்:

தொலைபேசி மூலம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை  தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை.

தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தவுடன் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ஆயுதப்படை மற்றும் பாதுகாப்பு படை போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் எந்த இடத்திலும் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இருந்தபோதிலும் மோப்ப நாயுடன் தாம்பரம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டை தேடிய நிலையில் பயணிகளிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

                                                                                                              – Gowtham Natarajan

 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?