ரூ.2000 கூலி தர மறுத்தவரின் தாயை கட்டையால் அடித்து கொலை..!

ரூ.2000 கூலி தர மறுத்தவரின் தாயை கட்டையால் அடித்து கொலை..!

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 2000 ரூபாய் கூலிப் பணம் தர மறுத்தவரின் தாயை உறவினர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கருந்தேவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். பொறியியல் பட்டதாரியான இவர், கோவையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அவரது உறவினரான சின்ராஜ் என்பவரை கோவைக்கு வேலைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேலை செய்ததற்கான கூலியை சின்ராஜ் சண்முகத்திடம் கடந்த ஒரு வாரமாக கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கூலி பணத்தை கேட்டு சண்முகத்தின் தாயிடம் சின்ராஜ் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சின்ராஜ், சண்முகத்தின் தாய் மல்லிகாவை பின்பக்கமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மல்லிகாவை அப்பகுதியினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக  மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீஸார், கட்டை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து கொலை செய்த உறவினர் சின்ராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                                                                                                – Gowtham Natarajan 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks