மாநில அமைப்பு செயலாளர் ஷேக் மதார் கைது விடுவிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியினர் மனு..!

சேலம்:

மாநில அமைப்பு செயலாளர் ஷேக் மதார் கைது விடுவிக்க கோரி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க பட்டது இவ்மனுவில் கூறியிருப்பதாவது.

கடந்த 11-06-2022 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் ஷேக் மதார் வீட்டிற்கு சென்று டவுண் காவல் நிலையத்திலிருந்து வந்து இரண்டு காவலர்கள் விசாரனை என்ற பெயரில் அழைத்து சென்று விசாரனையை முடித்து திருப்பி அனுப்பாமல் எந்த காரணமும் இன்றி விளக்கத்தையும் கூறாமல் ஷேக் மதாரை கைது செய்து உள்ளார்கள். சேலம் மத்திய சிறையில் இருக்கும் மாநில அமைப்பு செயலாளர் ஷேக் மதாரை விடுவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் என்று அவ்மனுவில் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட தலைவர் நியாஸ் பாஷா, துனை தலைவர் சரண் ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் இவாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் யாரப் முபாரக் செரிப் , அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநகர மாவட்ட தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

                                                                                                                        –காயல் அப்பாஸ்

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

⚠️

கூடுதல் செய்தியாளர்கள் தேவை.
தொடர்புக்கு: careers@ipdtamil.com
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Website Developed & Maintained by
IPD Media Networks