அமலாக்கத்துறை அலுவலகம் அருகே 144 தடை..! காங்கிரஸ் கட்சியினர் கைது..!!

அமலாக்கத்துறை அலுவலகம் அருகே 144 தடை..! காங்கிரஸ் கட்சியினர் கைது..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். இந்நிலையில் நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி வழங்க டெல்லி காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும் இன்று காலை திட்டமிட்டபடி பேரணி நடத்துவதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திரண்ட கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டம் நடத்த டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட தயாராக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீடு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி ஆஜராக உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

                                                                                                                   -Prabhanjani Saravanan

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks