சேலம்:
சேலம் மாவட்டம், சங்ககிரி மாணவர் விடுதியில் சமையல் பொருள்கள் மற்றும் சமையல் செய்யும் பணிகளை வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் சௌமியா சங்ககிரி பால்வாய் பகுதியில் உள்ள மாணவர் விடுதியில் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு மாணவர்களுக்கு உணவு சமையல் பொருள்கள் மற்றும் சமையல் செய்யும் பணிகளை திடீர் ஆய்வு செய்து வார்டன், சமையலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்விற்கு முன்னர் சங்ககிரி அருகே உள்ள இருகாலூரில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில்
சங்ககிரி வட்டாட்சியர் பானுமதி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், வட்ட நில அளவை துறையினர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் ஆய்வின் போது உடனிருந்தனர்.
-Eniyan