காதலன் வீட்டு முன் பெண் தர்ணா..!

சேலம்:

ஓமலூர் அருகே திருமணமான பெண் காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ஊமைகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் புகழரசன் (வயது 28). இவர் சென்னை போரூரில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருடைய மனைவி ஹேமப்பிரியா (29) ஓமலூருக்கு வந்தார்.

பின்னர் அவர் புகழரசன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது ஹேமப்பிரியா தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாகவும், கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதால், புகழரசன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு ஆண்டாக பழகி வந்ததாகவும் கூறினார். மேலும் தற்போது அவர் திருமணம் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஹேமப்பிரியாவை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான பெண் காதலன் வீட்டு முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com