இந்தியா:
நாடுமுழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்த போராட்டத்தை முன்னிட்டு நாளை பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
-Pradeep