டேங்க் ஆபரேட்டரை தாக்கிய தந்தை மகன்..!

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவன்னகவுண்டனூர் ஊராட்சி மஞ்சக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (54 )இவர் டேங்கர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டேங்கிற்க்கு தண்ணீர் எடுத்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பட்டக்காரனூர் பகுதியை சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் சுப்பிரமணியை வழிமறித்து தங்களது வீட்டிற்கு சரியாக தண்ணீர் வருவதில்லை என தகாத வார்த்தையால் திட்டியதுடன் தந்தை மகன் இருவரும் சுப்பிரமணியை தாக்கியதாகவும் இதனையடுத்து பலத்த காயமடைந்த சுப்பிரமணி சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தந்தை மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                                                           -Eniyan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?