"பள்ளிக்கூடத்துல கூட்டி பெறுக்க சொல்றாங்க"- கதறும் மாணவனின் கண்ணீர் கடிதம்..!

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களை தினந்தோறும் வகுப்பறையை கூட்டி சுத்தம் செய்ய ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்வதாக பாதிக்கபட்ட மாணவர் ஆட்சியரகத்தில் பரபரப்பு புகார்.

சேலம்  அம்மாபேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள்  பயின்றுவருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களை சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் வகுப்பறையை தூய்மைப்படுத்த 3 மாணவர்களை தினந்தோறும் நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

தினமும் மூன்று மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளியை கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்பது ஆசிரியர் உத்தரவு. இதனால் மாணவர்கள் கால அட்டவணை போட்டு பள்ளியை தூய்மை படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் வகுப்பறையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

புகாரில், தினந்தோறும் பள்ளிக்கு வந்தவுடன் வகுப்பறையை கூட்டி தூய்மைப்படுத்த ஆசிரியர்கள் சொல்வதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், மேலும் பள்ளியில் முறையான குடிநீர் வசதி கழிப்பிட வசதி இல்லை என்றும், இரண்டு பேர் பயன்படுத்தக்கூடிய கழிப்பறையும் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் தங்கள் திறந்தவெளியில் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளி வகுப்பறையில் தூய்மை செய்ய பணியாளர்கள் இருந்தும் ஆசிரியர்கள் தங்களின் நிர்ப்பந்த படுத்துவதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வகுப்பறையை தூய்மைப்படுத்த மாணவர்களை ஆசிரியர்கள் நிர்ப்பந்திப்பதாக கூறப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                                                                                               – Geetha Sathya Narayanan

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!