கைதாகிறாரா சவுக்கு சங்கர்.? போலீஸில் பெண் பத்திரிகையாளர் புகார்.!

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது பத்திரிகையாளர் சந்தியா ரவிச்சந்தர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அரசியில் நிகழ்வுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக பேசி வருபவர் சவுக்கு சங்கர்.  இவர் மீது நல்லவிதமாகவம், எதிர்மறையாகவும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. யூட்யூப் பேட்டி, தனது தளத்தில் செய்திகள் எழுதுவது என்று தன்னுடைய நிலைப்பாட்டை பதிவு செய்து வருகிறார்.  சமீபத்தில் சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் சவுக்கு சங்கர் மீதும், தனியார் பத்திரிக்கை மீதும் புகார் கொடுத்து இருந்தது.  இதன் பிறகு அனைவரது பார்வையும் இவர் மீது சற்று அதிகமாக இருந்தது.

இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிச்சந்தர் மாநில மகளிர் ஆணையத்தில் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்து இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  “சவுக்கு சங்கர் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடவடிக்கை கோரி மனு அளித்துள்ளேன்.  2018ம் ஆண்டு முதல் எனது தனியுரிமையை துன்புறுத்துதல், அவதூறு செய்தல், பின்தொடர்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும்  பல ஆண்டுகளாக பலன் இல்லை.

பிரதமரே FIR பதிவு செய்ய சொன்னாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க போவது இல்லை. இன்று மதியம் 2 மணிக்கு என்னை ஆஜர் ஆகா சொல்லி மாநில மகளிர் ஆணையம் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. குறைந்தபட்சம் இந்த மன்றமாவது எனக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் அனைவரின் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.

                                                                                                                                            – RK Spark

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!