வாலிபருடன் கள்ளக்காதல்..! கணவர் திட்டமிட்டு கொலை..!

சேலம்:

சேலம் மாவட்டம் காரைக்காடை சேர்ந்தவர்கள் சக்திவேல்(37) புகழரசி(27) தம்பதி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இன்று காலை சக்திவேல் திடீரென இறந்து விட்டதாக அவரது மனைவி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புகழரசியிடம் கிறுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எனக்கும் பக்கத்து வீட்டுக்காரர் முத்துக்குமாருக்கும்(29) திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்த உறவுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

நேற்றிரவு தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். பின்னர் மயக்கநிலையில் இருந்த கணவருக்கு விஷம் கலந்த பால், உணவை கொடுத்து கொன்றேன்” என புகழரசி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                                                       -Pradeep

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk