குமரி:
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி கண்ணயம் பழஞ்சி என்ற இடத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மனைவி சுஜனகுமாரி (64). கடந்த 6-ம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த நைட்டி உடையில் தீப்பிடித்துள்ளது. இதில் காயமடைந்த அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு சிகிட்சை பலனின்றி நேற்று இறந்தார். இது தொடர்பாக அவரது மகன் விஜி என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
–