சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம் தலைமையில், சித்த மருத்துவா் கே. லட்சுமணன் யோகாசன பயிற்சி அளித்தாா். மருத்துவா்கள் ராகுல், காா்த்திகா, ராஜ்குமாா் ஆகியோா் யோகாசனத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனா்.
உருது தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் க. செல்வம், மாணவ-மாணவியருக்கு யோகாசன பயிற்சி அளித்தாா்.
-Naveenraj