மதுரை:
திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர்கள் மஹாராஜா-சாந்தி தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 38 நாட்களான குழந்தை கடந்த 15ம் தேதி தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் சாந்தியிடம் கிறுக்குபிடி விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகர உண்மை வெளியானது.
அதாவது சாந்தி குழந்தையை அருகில் தூங்க வைத்து விட்டு, தானும் தூங்கியுள்ளார். அப்போது குழந்தை மீது சாய்ந்து தூங்கியத்தில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்துள்ளது. பின்னர் இது தனது கணவருக்கு தெரிந்தால் விபரீதமாகும் என நினைத்து அருகில் உள்ள வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தையை வீசியுள்ளார். தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-Pradeep