ராமநாதபுரம்:
ராமநாதபுரம், வாலாந்தரவை ரயில்நிலைய பாதையில் இன்று காலை கீமேன் வீரபெருமாள் என்பவர் ஆய்வு செய்த போது ஓரிடத்தில் தண்டவாளம் துண்டாக உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நேரத்தில் சென்னை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் அந்த பகுதியை கடக்கவிருந்தது. உடனே வீரபெருமாள் சிவப்பு கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் சுமார் 200 மீ ஓடியுள்ளார்.
இதை பார்த்ததும் ரயிலின் ஓட்டுனரும் ரயிலை நிறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்ட நிலையில் கீமேன் வீரப்பெருமாளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
-Pradeep