காதலித்ததால் கரு உண்டானது - பயத்தில் பூச்சி மருந்து குடித்த இளம் ஜோடி..!

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அஜய். 20 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி செல்போனில் நேரத்தை கழித்தவர்கள் நெருங்கி பழகியிருக்கிறார்கள். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளைஞர் எல்லை மீறியிருக்கிறார். அதில் மூன்று மாதம் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனால் காதலர்கள் இருவரும் பயத்தில் உறைந்து போனார்கள்.

சம்பவத்தன்று பெற்றோருக்கும் ஊராருக்கும் தெரிந்து விடும் என பயத்தில் சிறுமி உயிரை விட முடிவெடுத்திருக்கிறார். யாருமில்லாத நேரம் பார்த்து வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுவரை யாருக்கும் தெரியாது சிறுமி கர்ப்பமாக இருப்பது.

காதலி பூச்சி மருந்து குடித்ததை அறிந்த இளைஞர் அஜய்யும் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து மயங்கி உள்ளார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து 17 வயது சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஜய் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் இளைஞன் அஜய் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                                                                                                                  – Gowtham Natarajan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?