திருட போன கடைக்கு கடிதம் போட்ட திருடன்..!

கேரள:

கடையில தான் எதுவும் இல்லையே அப்புறம் எதுக்கு கடையை மூடிட்டு போன கடையோட கதவு கண்ணாடியாச்சும் தப்பிருக்கும் – இப்படிக்கு திருடன்.

கேரள மாநிலம் வயநாட்டில் குந்நங்குளம் என்னும் பகுதியில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இரண்டு கடைகளில் கைவரிசை காட்டிய திருடன், மூன்றாவதாக துணி கடை ஒன்றில் திருட முயன்றுள்ளார். அப்போது, கடையின் கண்ணாடி கதவை உடைத்து நுள்ளே நுழைந்த கொள்ளையர் மிரண்டு போயிருக்கிறார். கடையில் எதுவும் இல்லாமல் போனது. கல்லாப்பெட்டியும் காலியாக இருந்தது. இதனால் விரக்தியடைந்த கொள்ளையர் உடைந்த கண்ணாடி கதவின் கதவின் துண்டில் கடையின் உரிமையாளருக்கு குறிப்பு எழுதி வைத்து சென்றிருக்கிறார்.

அதில் , ’கடைக்குள் எதுவும் இல்லை என்றால் எதற்காக கடையை மூடினாய், கண்ணாடிக் கதவாச்சும் தப்பித்து இருக்கும்’என்று எழுதி வைத்திருக்கிறார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்பேட்டா போலீசார் கடையின் சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடையில் கைவரிசை காட்டியவர் வயநாடு, களிப்பறம்பு பகுதியை சார்ந்த விஸ்வராஜ் என்பது தெரியவந்தது. விசாரணையில் கேரளா முழுவதுமாக பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் வயநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த திருடன் விஸ்வராஜ்-யை மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கண்ணாடி துண்டில் கடைக்காரருக்குத் திருடர் எழுதிவைத்த குறிப்பு தற்போது இணையதளங்களிலும் வைரலாகி ஆகி வருகிறது.

                                                                                                                  – Gowtham Natarajan 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?