கர்நாடகா:
கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் தலித் சங்கர்ஷ் சமிதி (டிஎஸ்எஸ்) தலைவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரசிம்ம மூர்த்தி என்ற குறி மூர்த்தி கொல்லப்பட்டார்.
தும்கூர் குப்பிச்சி கிராமத்தில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரிக்கு அருகில் டீக்கடை முன்பு இந்த சம்பவம் நேற்று நடந்தது. பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் நரசிம்ம மூர்த்தியை வெட்டிக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இறந்த பட்டியலின தலைவரின் உறவினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
விசாரணை அதிகாரிகள் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்று உறுதியளித்தார்.
–