தமிழக வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.! இனிமே இது கட்டாயம்...!! புகார் எண் அறிவிப்பு..

தமிழகத்தில் இருக்கும் வாகன ஸ்டாண்ட்களில் வெளி ஊருக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் ஆகியோர் தங்களது வண்டி வாகனங்களை நிறுத்தி செல்வார்கள். இதில் நிறுத்துவதற்கு குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளியூரில் பணிபுரிபவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல படை எடுத்தனர். இதனால் வாகன ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது கொரோனா குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஸ்டாண்டில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் சைக்கிளுக்கு ரூ.5, பிற இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் பல மாவட்டங்களில் தொடர்ந்து வந்த மயமாகவே இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர், இது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குத்தகையிடங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1913 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் அல்லது உரிம ஆய்வாளரிடம் புகார் அளிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

                                                                                                                                   -R Mohan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk