கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் விபரீதம்..!

கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் விபரீதம்..!

கோவை:

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர்கள் பழனி, கிட்டனம்மாள் தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆனா நிலையில் 3 மகள்கள், ஈஸ்வரன் (13), அர்ஜூனன் (12) ஆகிய 2 மகன்கள் என மொத்தம் 5 பேர் உள்ளனர். இதில் சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஈஸ்வரன் 8-ம் வகுப்பும் அர்ஜூனன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இருவரும் அடிக்கடி செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாடுவது சம்பந்தமாக சண்டை போட்டுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாட இருவரும் செல்போனுக்காக சண்டை போட்டனர். இதில் அர்ஜுனன் கீழே கிடந்த பிராந்தி பாட்டிலிலை எடுத்து உடைத்து தனக்குத்தானே வயிற்றில் குத்த முயற்சித்துள்ளான்.

 

இவர்களது அம்மா கிட்டனம்மாள் அதை பிடுங்கி சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் ப்ரிபயர் கேம் விளையாட செல்போன் கேட்டு இருவரும் சண்டை போட்டனர். இருவரையும் அக்கா வேப்பிலைக்காரி சமாதனம் செய்துள்ளார். அப்போது கோபமடைந்த அர்ஜுனன் வீட்டுக்குச் சென்று ஜன்னலில் தூக்குபோட்டுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அர்ஜுனன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks